Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 429

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனதான

Lyrics

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள்மிகநாணார்

சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிகளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள்விழியாலே

வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினைமினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணிமிகநீறால்

விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனைவிடுத்து நானொரு மித்திரு பொற்கழல்பணிவேனே

தரித்த தோகண தக்கண செக்கணகுகுக்கு கூகுகு குக்குகு குக்குகுதகுத்த தீதிகு தக்குகு திக்குகுஎனதாளந்

தடக்கை தாளமு மிட்டியல் மத்தளமிடக்கை தாளமு மொக்கந டித்தொளிதரித்த கூளிகள் தத்திமி தித்தெனகணபூதம்

அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடுமிரந்த மாமுடி யைக்கொடு கக்கழலடக்கை யாடிநி ணத்தையெ டுத்துணஅறவேதான்

அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறிதிருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள்பெருமாளே.

All songs →