Song 422
சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தந்ததான
Lyrics
சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந்துன்பமேவு
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந்தொன்றுநாயேன்
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண்டன்பரோடே
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன்சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந்தண்டர்பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ்சிந்திமாளச்
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண்டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந்தம்பிரானே.
