Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 420

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதான

Lyrics

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்குமதலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கயதிருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ்தனிலேறிச்

செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழைதனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணிசெயலினை யொத்துத் தயங்கு வஞ்சகவிழிசீறிப்

புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்பதமல ருக்குட் பணிந்த ணிந்தணிபுரிவளை கைக்குட் கலின்க லென்றிடஅநுராகம்

புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையிலுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடுபுணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள்மறவேனோ

கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடைமலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திடகணகண கட்கட் கணின்க ணென்றிடநடமாடுங்

கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தருமுருகபு னத்திற் றிரிந்த மென்கொடிகனதன வெற்பிற் கலந்த ணைந்தருள்புயவீரா

அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படையவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிடவருவோனே

அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள்பெருமாளே.

All songs →