Song 419
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தத்த தானதன தத்த தத்ததானதன தத்த தத்ததனதான
Lyrics
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்திகூறுசெய்த ழித்து ரித்துநடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்டகோபநுத லத்த ரத்தர்குருநாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்புநீறெழமி தித்த நித்தமனதாலே
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்தநீலமயில் தத்த விட்டுவரவேணும்
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்திஆரமது மெத்து சித்ரமுலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றிஆறிருதி ருப்பு யத்தில்அணைவீரா
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்திசீருறவு ளத்தெ ரித்தசிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்ததேவர்சிறை வெட்டி விட்டபெருமாளே.
