Song 395
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்தானதனத் தானதனத்தனதானா
Lyrics
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்டாடைமறைத் தாடுமலர்க்குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்டாரையுமெத் தாகமயக்கிடுமோகர்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்தூதுவிடுத் தேபொருளைப்பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்சோதியொளிப் பாதமளித்தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்சாயகடற் சூரைவதைத்திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்தாபரம்வைத் தாடுபவர்க்கொருசேயே
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்தேயுருகிச் சேருமணிக்கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்தேவமகட் கோர்கருணைப்பெருமாளே.
