Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 396

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனதானன தனனத் தனதானனதனனத் தனதானனதனதான

Lyrics

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வருமிறுதிச் சிறுகால்வருமதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியிலெரியைத் தருமாமதிநிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலைதொலையத் தனிவீசியகடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்துவளத் தகுமோதுயர்தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனைமடியச் சுடஏவியவடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்மகிழப் புனமேவியமயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வயலருணைத் திருவீதியிலுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழிஅமரர்க் கரசாகியபெருமாளே.

All songs →