Song 393
அருமா மதனைப் பிரியா தசரக்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனா தனனத் தனனா தனனத்தனனதா தனனத்தனதான
Lyrics
அருமா மதனைப் பிரியா தசரக்கயலார் நயனக்கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்தணையா வலிகெட்டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்றிளையா வுளமுக்குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்கிருபா தமெனக்கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்டுரமோ டெறிபொற்கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்குருகா றிருபொற்புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்றெரியா வரனுக்கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்றிருவீ தியினிற்பெருமாளே.
