Song 392
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்தனத்தா தனத்தத்தனதான
Lyrics
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்கடுத்தாசை பற்றித்தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்டறப்பே தகப்பட்டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்கலிச்சா கரத்திற்பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்கலைப்போ தகத்தைப்புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்டுரைப்பார்கள் சித்தத்துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்டொளித்தோடும் வெற்றிக்குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்செருச்சூர் மரிக்கப்பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்றிருக்கோ புரத்திற்பெருமாளே.
