Song 391
கெஜநடை மடவார் வசமதி லுருகா
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனனா தனதன தனனாதனதன தனனாதனதான
Lyrics
கெஜநடை மடவார் வசமதி லுருகாகிலெசம துறுபாழ்வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியாகெடுசுக மதிலாழ்மதியாலே
தசையது மருவீ வசையுட லுடனேதரணியில் மிகவேயுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்தருநிழல் புகவேதருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்திருநெடு கருமால்மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்திரிபுரை யருள்சீர்முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவாநிறையயில் முடுகாவிடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணாநெடுமதில் வடசார்பெருமாளே.
