Song 390
இடமடு சுறவை முடுகிய மகர
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனன தனதன தனனதனதன தனதனதந்ததான
Lyrics
இடமடு சுறவை முடுகிய மகரமெறிகட லிடையெழுதிங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவிலெரியென வருசிறுதென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடியசரம்விடு தறுகணநங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவைதனிமல ரணையினலங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்மணிமுடி சிதறஎறிந்தவேலா
மறமக ளமுத புளகித களபவளரிள முலையைமணந்தமார்பா
அடலணி விகட மரகத மயிலிலழகுட னருணையினின்றகோவே
அருமறை விததி முறைமுறை பகருமரியர பிரமர்கள்தம்பிரானே.
