Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 386

கரியுரி அரவ மணிந்த மேனியர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனன தனந்த தானனதனதன தனன தனந்த தானனதனதன தனன தனந்த தானனதனதான

Lyrics

கரியுரி அரவ மணிந்த மேனியர்கலைமதி சலமு நிறைந்த வேணியர்கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர்கஞ்சமாதின்

கனமுலை பருகி வளர்ந்த காமனைமுனிபவர் கயிலை யமர்ந்த காரணர்கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர்கண்டகாள

விரிவென வுனது ளுகந்த வேலெனமிகவிரு குழையு டர்ந்து வேளினையனையவ ருயிரை விழுங்கி மேலும்வெகுண்டுநாடும்

வினைவிழி மகளிர் தனங்கள் மார்புறவிதமிகு கலவி பொருந்தி மேனியுமெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொழிந்திடாதோ

எரிசொரி விழியு மிரண்டு வாளெயிறிருபிறை சயில மிரண்டு தோள்முகிலெனவரு மசுரர் சிரங்கள் மேருஇடிந்துவீழ்வ

தெனவிழ முதுகு பிளந்து காளிகளிடுபலி யெனவு நடந்து தாள்தொழஎதிர்பொரு துதிர முகந்த வேகமுகைந்தவேலா

அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலைஅருணையி லறவு முயர்ந்த கோபுரமதினுறை குமர அநந்த வேதமொழிந்துவாழும்

அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்அடவியி லரிவை குயங்கள் தோய்புயஅரியர பிரம புரந்த ராதியர்தம்பிரானே.

All songs →