Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 387

கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதநததான

Lyrics

கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விடவடதம னியகிரி கம்ப மாய்நடகணபண விபரித கந்த காளபுயங்கராஜன்

கயிறென அமரர நந்த கோடியுமுறைமுறை யமுதுக டைந்த நாளொருகதியற வுலகைவி ழுங்கு மேகவொழுங்குபோல

வினைமத கரிகளு மெண்டி சாமுககிரிகளு முறுகிட அண்ட கோளகைவெடிபட எவரையும் விஞ்சி வேலிடுநஞ்சுபோல

விடுகுழை யளவும ளந்து காமுகருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதகவிழிவலை மகளிரொ டன்பு கூர்வதொழிந்திடாதோ

முனைபெற வளையஅ ணைந்த மோகரநிசிசரர் கடகமு றிந்து தூளெழமுகிலென வுருவமி ருண்ட தாருகனஞ்சமீன

முழுகிய திமிரத ரங்க சாகரமுறையிட இமையவர் தங்க ளூர்புகமுதுகிரி யுருவமு னிந்த சேவகசெம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுரஅருணையி லுறையும ருந்து ணாமுலைஅபிநவ வனிதைத ருங்கு மாரநெருங்குமால்கொண்

டடவியில் வடிவுக ரந்து போயொருகுறமகள் பிறகுதி ரிந்த காமுகஅரியர பிரமபு ரந்த ராதியர்தம்பிரானே.

All songs →