Song 385
உருகு மாமெழு காகவு மேமயல்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனதான
Lyrics
உருகு மாமெழு காகவு மேமயல்பெருகு மாசையு ளாகிய பேர்வரிலுரிய மேடையில் வார்குழல் நீவியவொளிமானார்
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்நெகிழ நாடிய தோதக மாடியுமுவமை மாமயில் போல்நிற மேனியருரையாடுங்
கரவ தாமன மாதர்கள் நீள்வலைகலக வாரியில் வீழடி யேநெறிகருதொ ணாவதி பாதக னேசமதறியாத
கசட மூடனை யாளவு மேயருள்கருணை வாரிதி யேயிரு நாயகிகணவ னேயுன தாளிணை மாமலர்தருவாயே
சுருதி மாமொழி வேதியன் வானவர்பரவு கேசனை யாயுத பாணிநல்துளப மாலையை மார்பணி மாயவன்மருகோனே
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்துகள தாகவு மேயெதி ராடிடுசுடரின் வேலவ னேயுல கேழ்வலம்வருவோனே
அருணர் கோடியி னாரொளி வீசியதருண வாண்முக மேனிய னேயரனணையு நாயகி பாலக னேநிறைகலையோனே
அணிபொன் மேருயர் கோபுர மாமதிளதிரு மாரண வாரண வீதியுளருணை மாநகர் மேவியு லாவியபெருமாளே.
