Song 384
அமுத மூறுசோ லாகிய தோகையர்
- Sthalam
- திருவருணை
- Raagam
- செஞ்சுருட்டி
- Thalam
- அங்தாளம் (7 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனதான
Lyrics
அமுத மூறுசோ லாகிய தோகையர்பொருளு ளாரையெ னாணையு னாணையெனருகு வீடிது தானதில் வாருமெனுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்தெருவின் மீதுகு லாவியு லாவிகள்அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நினருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரிகவுரி மோடிசு ராரிநி ராபரிகொடிய சூலிசு டாரணி யாமளிமகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரியுலக தாரிஉதாரிப ராபரிகுருப ராரிவி காரிந மோகரிஅபிராமி
சமர நீலிபு ராரித னாயகிமலைகு மாரிக பாலிந னாரணிசலில மாரிசி வாயம னோகரிபரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனிதிகிரி மேவுகை யாளிசெ யாளொருசகல வேதமு மாயின தாயுமையருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்முடிக டோ றுக டாவியி டேயொருசிலப சாசுகு ணாலிநி ணாமுணவிடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலைமுகிலு லாவுவி மானந வோநிலைசிகர மீதுகு லாவியு லாவியபெருமாளே.
