Song 383
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தானத் தானதன தானத்தானதன தானத்தந்ததான
Lyrics
பேதகவி ரோதத் தோதகவி நோதப்பேதையர்கு லாவைக்கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்பேதவுடல் பேணித்தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்தாழ்விலுயி ராகச்சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்சாரல்மற மானைச்சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்போதருணை வீதிக்கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்போனசிறை மீளச்சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்பாருலகு வாழக்கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்பாடுமவர் தோழத்தம்பிரானே.
