Song 345
படிறொ ழுக்கமு மடம னத்துள
- Sthalam
- காஞ்சீபுரம்
- Raagam
- சாரங்கா
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிடதகதிமி- 3 1/2தனன தத்தன தனன தத்தனதனன தத்தனதனதான
Lyrics
படிறொ ழுக்கமு மடம னத்துளபடிப ரித்துடனொடிபேசும்
பகடி கட்குள மகழ மெய்ப்பொருள்பலகொ டுத்தறஉயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டியவிதன முற்றிடமிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிருவினைய றப்பதமருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்குமர கச்சியிலமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்குவளை முற்றணிதிருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடுபுரமெ ரித்தவர்குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படைபொருது ழக்கியபெருமாளே.
