Song 344
நச்சரவ மென்று நச்சரவ மென்று
- Sthalam
- காஞ்சீபுரம்
- Raagam
- கானடா
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தந்த தத்ததன தந்ததத்ததன தந்ததனதான
Lyrics
நச்சரவ மென்று நச்சரவ மென்றுநச்சுமிழ்க ளங்கமதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்குநத்திரைவ ழங்குகடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்தஇச்சிறுமி நொந்துமெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கிஇத்தனையி லஞ்சலெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கைபச்சைமலை யெங்குமுறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்பத்திரம ணிந்தகழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்புகச்சியில மர்ந்தகதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்கைத்தளைக ளைந்தபெருமாளே.
