Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 346

மகுடக்கொப் பாடக் காதினில்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத்தத் தானத் தானனதனனத்தத் தானத் தானனதனனத்தத் தானத் தானனதந்ததான

Lyrics

மகுடக்கொப் பாடக் காதினில்நுதலிற்பொட் டூரக் கோதியமயிரிற்சுற் றோலைப் பூவோடுவண்டுபாட

வகைமுத்துச் சோரச் சேர்நகையிதழிற்சொற் சாதிப் பாரியல்மதனச்சொற் பாடுக் கோகிலரம்பைமாதர்

பகடிச்சொற் கூறிப் போர்மயல்முகவிச்சைப் பேசிச் சீரிடைபவளப்பட் டாடைத் தோளிருகொங்கைமேலாப்

பணமெத்தப் பேசித் தூதிடுமிதயச்சுத் தீனச் சோலிகள்பலரெச்சிற் காசைக் காரிகள்சந்தமாமோ

தகுடத்தத் தானத் தானனதிகுடத்தித் தீதித் தோதிமிதடுடுட்டுட் டாடப் பேரிகைசங்குவீணை

தடமிட்டுப் பாவக் கார்கிரிபொடிபட்டுப் போகச் சூரர்கள்தலையிற்றிட் டாடப் போர்புரிகின்றவேலா

திகிரிப்பொற் பாணிப் பாலனைமறைகற்புத் தேளப் பூமனைசினமுற்றுச் சேடிற் சாடியகந்தவேளே

தினையுற்றுக் காவற் காரியைமணமுற்றுத் தேவப் பூவொடுதிகழ்கச்சித் தேவக் கோன்மகிழ்தம்பிரானே.

All songs →