Song 332
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத்தனதான
Lyrics
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்சுத்தப் பட்டிட்டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்சொற்குற் றத்துத்துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்றொத்துக் கித்திப்பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்பிற்பட் டிட்டுத்தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்தத்திக் கத்துப்பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்தைக்குச் செச்சைத்தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்கைத்தச் சத்திப்படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்கச்சிச் சொக்கப்பெருமாளே.
