Song 333
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்தத்தத் தத்தத் தனனத்தனதான
Lyrics
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்கொத்துற் றுக்குப் பிணியுற்றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்கொத்தைச் சொற்கற் றுலகிற்பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்செற்றைச் சட்டைக் குடிலைச்சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்திட்டத் துக்குப் புகலப்பெறுவேனோ
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்டத்ரத் தெற்றிக் கடுகப்பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்புக்குப் பட்டுத் துருமத்தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்கைக்கொட் டிட்டிட் டுடல்சிற்கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்சத்திக் கச்சிக் குமரப்பெருமாளே.
