Song 331
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத்தனதான
Lyrics
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்தத்தத் தத்தத்தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்தொக்குத் திக்குக்குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்செத்துச் செத்துப்பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்செச்சைச் செச்சைக்கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்துட்கத் திட்கப்பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்சொர்க்கத் தத்தைக்கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்கத்தக் கத்தக்களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்கச்சிச் சொக்கப்பெருமாளே.
