Song 314
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான
Lyrics
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும்பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும்திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன்றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண்பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும்பெருமாளே.
