Song 313
தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான
Lyrics
தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங்கையில்வாழுஞ்
சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம்பிறவாதே
பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம்பழியாதே
பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென்துயர்போமோ
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந்திரிசூலந்
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்தரியரும் பிக்கப் பித்தத னத்தந்தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந்தெரியாத
பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண்கொடிவாழ்வே
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும்பெருமாளே.
