Song 312
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான
Lyrics
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும்பரையாளுங்
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன்ஜகதாதை
புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்புதியவன் செச்சைப் புட்பம ணக்கும்பலபாரப்
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம்பெறுவேனோ
அனல்விடுஞ் செக்கட் டுக்கய மெட்டும்பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன்திடமாக
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண்டவனீடுந்
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும்பெரியோனுந்
தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ்சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும்பெருமாளே.
