Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 294

முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்

Thalam
கண்ட த்ருவம் (17)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

(எடுப்பு /5/5 0 /5)தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததனதத்தத் தனத்ததனதனதான

Lyrics

முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்முட்டத்தொ டுத்தமலராலே

முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியெனமுற்பட்டெ றிக்குநிலவாலே

எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணிஇப்பொற்கொ டிச்சிதளராதே

எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்இற்றைத்தி னத்தில்வரவேணும்

மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகரவெற்பைத்தொ ளைத்தகதிர்வோலா

மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகிமிக்குப்ப ணைத்தமணிமார்பா

மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்சித்தத்தில் வைத்தகழலோனே

வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரைவெட்டித்து ணித்தபெருமாளே.

All songs →