Song 295
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதந்த தனதனன தனதந்ததனதனன தனதந்ததனதான
Lyrics
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்சமுகிலளக மகில்பொங்கஅமுதான
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்டமுகம்வெயர்வு பெறமன்றலணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்றுபடவுருகி யிதயங்கள்ப்ரியமேகூர்
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்றகவலைகெட நினதன்புபெறுவேனோ
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்டஅதிரவெடி படஅண்டமிமையோர்கள்
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டுஅவர்கள்முனை கெடநின்றுபொரும்வேலா
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றைசடைமுடியி லணிகின்றபெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்றதணிமலையி லுறைகின்றபெருமாளே.
