Song 293
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தனதன தனத்த தனதனதனத்த தனதனதனதான
Lyrics
முடித்த குழலினர் வடித்த மொழியினர்முகத்தி லிலகியவிழியாலும்
முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்இளைத்த இடையினுமயலாகிப்
படுத்த அணைதனி லணைத்த அவரொடுபடிக்கு ளநுதினமுழலாதே
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுனபதத்து மலரிணையருள்வாயே
துடித்து தசமுகன் முடித்த லைகள்விழதொடுத்த சரம்விடுரகுராமன்
துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடுதுலக்க அரிதிருமருகோனே
தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படுதழைத்த கதலிகளவைசாயத்
தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்தழைத்த சரவணபெருமாளே.
