Song 288
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- த்விஜாவந்தி / ரஞ்சனி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்ததத்த தத்த தத்த தத்ததனதான
Lyrics
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்பொற்பு ரைத்து நெக்கு ருக்கஅறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்கபுத்தி யிற்க லக்க மற்றுநினையாதே
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றிமுற்க டைத்த வித்து நித்தமுழல்வேனை
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்துமுத்தி சற்றெ னக்க ளிப்பதொருநாளே
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்தவித்த கத்ததர் பெற்ற கொற்றமயில்வீரா
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்குமெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பிலுறைவோனே
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்றகற்பு ரத்தி ருத்த னத்திலணைவோனே
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்தகைத்தொ ழுத்த றித்து விட்டபெருமாளே.
