Song 287
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தனதானா
Lyrics
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்கைப்பொருள் புக்கிடவேதான்
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்பொட்டணி நெற்றியரானோர்
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்அற்பர மட்டைகள்பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியைஅற்றிட வைத்தருள்வாயே
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவிடக்கைமு ழக்கொலியாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்குத்தத ணிக்குமரேசா
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகுறத்தித னக்கிரிமேலே
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்தலைக்குலை கொத்தியவேளே.
