Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 286

பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்தனனத் தந்ததனத்தனதான

Lyrics

பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்புதுமைப் புண்டரிகக்கணையாலே

புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்பொழியத் தென்றல்துரக்குதலாலே

தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்திரியத் திங்களுதிப்பதனானே

செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்தெரிவைக் குன்குரவைத்தரவேணும்

அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்தருமைக் குன்றவருக்கெளியோனே

அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்தயில்கைக் கொண்டதிறற்குமரேசா

தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்தழுவிக் கொண்டபுயத்திருமார்பா

தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்தணிகைச் செங்கழநிப்பெருமாளே.

All songs →