Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 285

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான

Lyrics

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்துகளிற் புதையத்தனமீதே

புரளப் புரளக் கறுவித் தறுகட்பொருவிற் சுறவக்கொடிவேள்தோள்

தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்செயலற் றனள்கற்பழியாதே

செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்தெரிவைக் குணர்வைத்தரவேணும்

சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்சுரருக் குரிமைப்புரிவோனே

சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்சுருதிப் பொருளைப்பகர்வோனே

தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்தனிநெட் டயிலைத்தொடும்வீரா

தவளப் பணிலத் தரளப் பழனத்தணிகைக் குமரப்பெருமாளே.

All songs →