Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 284

பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம்தனதான

Lyrics

பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்ப்ரபுத்தன பாரங்களிலேசம்

ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்ப்ரியக்கட லு஡டுந்தணியாத

கருக்கட லு஡டுங் கதற்றும நேகங்கலைக்கட லு஡டுஞ்சுழலாதே

கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்கழற்புணை நீதந்தருள்வாயே

தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்சதுர்த்தச லோகங்களும்வாழச்

சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்சளப்பட மாவுந்தனிவீழத்

திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்செருக்கு மயூரந்தனில்வாழ்வே

சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்திருத்தணி மேவும்பெருமாளே.

All songs →