பாடல் 284
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம்தனதான
பாடல் வரிகள்
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்ப்ரபுத்தன பாரங்களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்ப்ரியக்கட லுடுந்தணியாத
கருக்கட லுடுங் கதற்றும நேகங்கலைக்கட லுடுஞ்சுழலாதே
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்கழற்புணை நீதந்தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்சதுர்த்தச லோகங்களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்சளப்பட மாவுந்தனிவீழத்
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்செருக்கு மயூரந்தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்திருத்தணி மேவும்பெருமாளே.
