Song 289
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம்தனதான
Lyrics
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்மதிப்பிள வாகும்நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்மலர்க்கழல் பாடுந்திறநாடாத்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்சமத்தறி யாவன்பிலமுகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்தனக்கினி யார்தஞ்சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்குறட்பெல மாயன்நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்குணத்ரய நாதன்மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்சிறப்பது றாஎண்டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்திருத்தணி மேவும்பெருமாளே.
