Song 28
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- காம்போதி
- Thalam
- கண்டசாபு (2 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனனதனதானா
Lyrics
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழலஅனலவிய மலமொழுகஅகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழஅழலினிகர் மறலியெனையழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்திருவடியி லணுகவரமருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇருசெவிகுளிர இனியதமிழ்பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரிநிருதிநிதி பதிகரியவனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரிநிருதனுர மறஅயிலைவிடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியுமகிழமடி மிசைவளருமிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளினமறையவுயர் கரையிலுறைபெருமாளே.
