Song 27
அளக பாரம லைந்துகு லைந்திட
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனதான
Lyrics
அளக பாரம லைந்துகு லைந்திடவதனம் வேர்வுது லங்கிந லங்கிடஅவச மோகம் விளைந்துத ளைந்திடஅணைமீதே
அருண வாய்நகை சிந்திய சம்ப்ரமஅடர்ந காநுதி பங்கவி தஞ்செய்துஅதர பானம ருந்திம டுங்கிறமுலைமேல்வீழ்ந்
துளமும் வேறுப டும்படி ஒன்றிடுமகளிர் தோதக இன்பின்மு யங்குதல்ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடுசிவயோகத்
துருகு ஞானப ரம்பர தந்திரஅறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணிஉபய சீதள பங்கய மென்கழல்தருவாயே
இளகி டாவளர் சந்தன குங்குமகளப பூரண கொங்கைந லம்புனைஇரதி வேள்பணி தந்தையும் அந்தணமறையோனும்
இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்ஹரஹ ராசிவ சங்கர சங்கரஎனமி காவரு நஞ்சினை யுண்டவர்அருள்பாலா
வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடிபடவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்மகர வாரிக டைந்தநெ டும்புயல்மருகோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்இடைவி டாதுநெ ருங்கிய மங்கலமகிமை மாநகர் செந்திலில் வந்துறைபெருமாளே.
