Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 26

அவனிபெ றுந்தோட் டம்பொற்

Thalam
சதுஸ்ர ரூபகம் (6)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதானா

Lyrics

அவனிபெ றுந்தோட் டம்பொற்குழையட ரம்பாற் புண்பட்டரிவையர் தம்பாற் கொங்கைக்கிடையேசென்

றணைதரு பண்டாட் டங்கற்றுருகிய கொண்டாட் டம்பெற்றழிதரு திண்டாட் டஞ்சற்றொழியாதே

பவமற நெஞ்சாற் சிந்தித்திலகுக டம்பார்த் தண்டைப்பதயுக ளம்போற் றுங்கொற்றமுநாளும்

பதறிய அங்காப் பும்பத்தியுமறி வும்போய்ச் சங்கைப்படுதுயர் கண்பார்த் தன்புற்றருளாயோ

தவநெறி குன்றாப் பண்பிற்றுறவின ருந்தோற் றஞ்சத்தனிமல ரஞ்சார்ப் புங்கத்தமராடி

தமிழினி தென்காற் கன்றிற்றிரிதரு கஞ்சாக் கன்றைத்தழலெழ வென்றார்க் கன்றற்புதமாகச்

சிவவடி வங்காட் டுஞ்சற்குருபர தென்பாற் சங்கத்திரள்மணி சிந்தாச் சிந்துக்கரைமோதும்

தினகர திண்டேர்ச் சண்டப்பரியிட றுங்கோட் டிஞ்சித்திருவளர் செந்தூர்க் கந்தப்பெருமாளே.

All songs →