Song 25
அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- புன்னாக வராளி
- Thalam
- அங்கதாளம் (24)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தனதனன தான தானன தனதனன தான தானனதனதனன தான தானன தந்தத் தந்தத்தனதான
Lyrics
அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபனஅபிநவ விசால பூரணஅம்பொற் கும்பத்தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதெனஅறவுமுற வாடி நீடியஅங்கைக் கொங்கைக்கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான வேளையிலிழைகலைய மாத ரார்வழியின்புற் றன்புற்றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்இணையடிகள் பாடி வாழஎனெஞ்சிற் செஞ்சொற்றருவாயே
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதியசதுர்மறையி னாதி யாகியசங்கத் துங்கக்குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவிதனைமுழுதும் வாரி யேயமுதுண்டிட் டண்டர்க்கருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலைதெளிவினுடன் மூல மேயெனமுந்தச் சிந்தித்தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவியஜெயசரவ ணாம னோகரசெந்திற் கந்தப்பெருமாளே.
