Song 24
அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தத் தனனத் தந்தத் தனனத்தந்தத் தனனத்தனதானா
Lyrics
அம்பொத் தவிழித் தந்தக் கலகத்தஞ்சிக் கமலக்கணையாலே
அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்தந்திப் பொழுதிற்பிறையாலே
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்றின்பக் கலவித்துயரானாள்
என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்கின்பப் புலியுற்றிடலாமோ
கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்கொங்கைக் குறவிக்கினியோனே
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்கொஞ்சித் தமிழைப்பகர்வோனே
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்சிந்தக் கறுவிப்பொரும்வேலா
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்செந்திற் குமரப்பெருமாளே.
