Song 23
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- கல்யாணி
- Thalam
- அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2தனதனன தனதனன தந்தத் தந்தத்தனதனன தனதனன தந்தத் தந்தத்தனதனன தனதனன தந்தத் தந்தத்தனதான
Lyrics
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச்சமனோலை
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்கரையவுற வினரலற உந்திச் சந்தித்தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக்கெனநாடா
திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப்பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற்கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத்தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற்குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப்பெருமாளே.
