Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 22

அந்தகன் வருந்தினம் பிறகிடச்

Thalam
அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2தந்தன தனந்தனந் தனதனத்தந்தன தனந்தனந் தனதனத்தந்தன தனந்தனந் தனதனத்தனதான

Lyrics

அந்தகன் வருந்தினம் பிறகிடச்சந்ததமும் வந்துகண் டரிவையர்க்கன்புருகு சங்கதந் தவிரமுக்குணமாள

அந்திபக லென்றிரண் டையுமொழித்திந்திரிய சஞ்சலங் களையறுத்தம்புய பதங்களின் பெருமையைக்கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்கந்தனை யறிந்தறிந் தறிவினிற்சென்றுசெரு குந்தடந் தெளிதரத்தணியாத

சிந்தையு மவிழ்ந்தழிந் துரையொழித்தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்சிந்தைவர என்றுநின் தெரிசனைப்படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்கும்பிடு புரந்தரன் பதிபெறக்குஞ்சரி குயம்புயம் பெறஅரக்கருமாளக்

குன்றிடிய அம்பொனின் திருவரைக்கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்குண்டல மசைந்திளங் குழைகளிற்ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்தண்டைகள் கலின்கலின் கலினெனத்திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்சந்ததி சகந்தொழுஞ் சரவணப்பெருமாளே.

All songs →