Song 21
அங்கை மென்குழ லாய்வார் போலே
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதனதான
Lyrics
அங்கை மென்குழ லாய்வார் போலேசந்தி நின்றய லோடே போவாரன்பு கொண்டிட நீரோ போறீரறியீரோ
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்பின்பு கண்டறி யோநா மீதேஅன்று மின்றுமொர் போதோ போகாதுயில்வாரா
எங்க ளந்தரம் வேறா ரோர்வார்பண்டு தந்தது போதா தோமேலின்று தந்துற வோதா னீதேனிதுபோதா
திங்கு நின்றதென் வீடே வாணரென்றி ணங்கிகள் மாயா லீலாஇன்ப சிங்கியில் வீணே வீழாதருள்வாயே
மங்கு லின்புறு வானாய் வானுடன்ற ரும்பிய காலாய் நீள்கால்மண்டு றும்பகை நீறா வீறாஎரிதீயாய்
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்அம்ப ரம்புனை பாராய் பாரேழ்மண்ட லம்புகழ் நீயாய் நானாய்மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்அண்ட பந்திகள் தாமாய் வானாய்ஒன்றி னுங்கடை தோயா மாயோன்மருகோனே
ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்உண்ட நெஞ்சறி தேனே வானோர்பெருமாளே.
