Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 29

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு

Thalam
அங்கதாளம் (7 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2தனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானனதனதான

Lyrics

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறுதுவட்பஞ் சானத டாகம்வி டாமடஅனத்தின் தூவிகு லாவிய சீறடிமடமானார்

அருக்கன் போலொளி வீசிய மாமரகதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்அழுத்தும் பாவியை யாவி யிடேறிடநெறிபாரா

வினைச்சண் டாளனை வீணணை நீணிதிதனைக்கண் டானவ மானநிர் மூடனைவிடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழிபகராதே

விகற்பங் கூறிடு மோகவி காரனைஅறத்தின் பாலொழு காதமு தேவியைவிளித்துன் பாதுகை நீதர நானருள்பெறுவேனோ

முனைச்சங் கோலிடு நீலம கோததிஅடைத்தஞ் சாதஇ ராவண னீள்பலமுடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன்மருகோனே

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரிதிரைக்கங் காநதி தாதகி கூவிளமுடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வருமுருகோனே

தினைச்செங் கானக வேடுவ ரானவர்திகைத்தந் தோவென வேகணி யாகியதிறற்கந் தாவளி நாயகி காமுறும்எழில்வேலா

சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசியதிருச்செந் தூர்வரு சேவக னேசுரர்பெருமாளே.

All songs →