Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 261

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்தனதனத் தனதனத்தனதான

Lyrics

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்கெடுபிறப் பறவிழிக்கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்கிகள்தமைச் செறிதலுற்றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்றறவுநெக் கழிகருக்கடலு஡டே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்றடியிணைக் கணுகிடப்பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்பொறியிலச் சமணரத்தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்புகலியிற் கவுணியப்புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்தவர்திருப் புதல்வநற்சுனைமேவுந்

தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்தணியினிற் சரவணப்பெருமாளே.

All songs →