Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 260

கிரியு லாவிய முலைமிசை துகிலிடு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனதான

Lyrics

கிரியு லாவிய முலைமிசை துகிலிடுகபட நாடக விரகிக ளசடிகள்கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர்விரகாலே

க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்முழுது நாறிக ளிதமொழி வசனிகள்கிடையின் மேல்மன முருகிட தழுவிகள்பொருளாலே

பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்அதிக மாவொரு பொருள்தரு பவரொடுபழைய பேரென இதமுற அணைபவர்விழியாலே

பகழி போல்விடு வினைகவர் திருடிகள்தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகைபகர மாமயில் மிசைவர நினைவதுமொருநாளே

அரிய ராதிபர் மலரய னிமையவர்நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெஅசுரர் தூள்பட அயில்தொடு மறுமுகஇளையோனே

அரிய கானக முறைகுற மகளிடகணவ னாகிய அறிவுள விதரணஅமரர் நாயக சரவண பவதிறலுடையோனே

தரும நீதியர் மறையுளர் பொறையுளர்சரிவு றாநிலை பெருதவ முடையவர்தளர்வி லாமன முடையவ ரறிவினர்பரராஜர்

சகல லோகமு முடையவர் நினைபவர்பரவு தாமரை மலரடி யினிதுறதணிகை மாமலை மணிமுடி யழகியல்பெருமாளே.

All songs →