Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 262

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனந் தனனத் தனனந் தனனத்தனனந் தனனத்தனதான

Lyrics

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்கொலையின் பமலர்க்கணையாலே

குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்கொடிகொங் கையின்முத்தனலாலே

புயல்வந் தெறியக் கடனின் றலறப்பொருமங் கையருக்கலராலே

புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்புயம்வந் தணையக்கிடையாதோ

சயிலங் குலையத் தடமுந் தகரச்சமனின் றலையப்பொரும்வீரா

தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்தனமொன் றுமணித்திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்பணியுந் தணிகைப்பதிவாழ்வே

பரமன் பணியப் பொருளன் றருளிற்பகர்செங் கழநிப்பெருமாளே.

All songs →