Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 257

கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்தனனத்த தத்தனத்தனதான

Lyrics

கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக்

கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்கருவிற்பு கப்பகுத்துழல்வானேன்

சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்கசரப்ப ளிக்கெனப்பொருள்தேடி

சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்சரணப்ர சித்திசற்றுணராரோ

குவட்டெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்குமுறக்க லக்கிவிக்ரமசூரன்

குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்துதிரத்தி னிற்குளித்தெழும்வேலா

சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்றுவலைச்சி மிழ்த்துநிற்பவள்நாணத்

தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்சுருதித்த மிழ்க்கவிப்பெருமாளே.

All songs →