Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 258

கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத்தனதான

Lyrics

கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்கனத்தையொத் துமொய்த்தமைக்குழலார்தங்

கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்கழற்பதத் தடுத்திடற்கறியாதே

இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்திசைத்தசைத் தசுக்கிலத்தசைதோலால்

எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்தெனக்குநித் தமுத்தியைத்தரவேணும்

பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்பயத்தினிற் பயப்படப்பொரும்வேலா

பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்படைத்தகுக் குடக்கொடிக்குமரேசா

தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்செருக்குறத் திருப்புயத்தணைவோனே

திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.

All songs →