Song 256
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தானம் தனதன தானம்தனதன தானம்தனதான
Lyrics
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்கனவளை யாலுங்கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்கருதலை யாலுஞ்சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்கொடியிடை யாள்நின்றழியாதே
குரவணி நீடும் புமணி நீபங்குளிர்தொடை நீதந்தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்திருமகள் நாயன்தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்செறிவுடன் மேவுந்திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்தணிகையில் வாழ்செங்கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்தனிமயி லேறும்பெருமாளே.
