Song 255
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம்தனதான
Lyrics
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்கரிக்குவ டிணைக்குந்தனபாரக்
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்கலைத்துகில் மினுக்யும்பணிவாரைத்
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்தவிர்த்துனது சித்தங்களிகூரத்
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்தலத்தினி லிருக்கும்படிபாராய்
புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்பொடிப்பணி யெனப்பன்குருநாதா
புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்புகழ்ச்சிய முதத்திண்புலவோனே
திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்தெறிப்புற விடுக்குங்கதிர்வேலா
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்திருத்தணி யிருக்கும்பெருமாளே.
